search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் நிலைகள்"

    • வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பாதுகாப்பான முறையில் நீர் நிலைகளை பயன்படுத்த வேண்டும்.
    • விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்ததது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் பி.எம்.கிஷான் உதவித் தொகை, பயிர் காப்பீடு, தரிசு நில திட்டம், கொப்பரை கொள்முதல், சொட்டு நீர் பாசனம், பயிர்களை அழிக்கும் வன விலங்கு களை கட்டுப்படுத்துதல், கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடன டியாக அகற்றி பயன் பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங் களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல் பாது காத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தினை பாது காத்திடவும், விவசாயிகளின் கோரிக்கை களுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றி தழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால், விவசாயிகள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளை பயன்படுத்த வேண்டும். தங்களது கால்நடைகளையும் பாதுகாப்பான முறையில் பராமரித்துக் கொள்ள வேண்டும். மேலும், மழை யினால் கிடைக்கப்பெறும் நீரினை முறையாக பயன் படுத்தி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால் துரை (தேவகோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 40 நாட்களுக்கு மேலாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
    • விடுமுறையில் வந்த அவர் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியம், பொன்னிவாடி கிராமத்தில் உள்ளது நல்லதங்காள் ஓடை அணை.இப்பகுதியில் உள்ள காலியிடத்தில், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. ஓடையின் நீர்த்தேக்க பகுதியில், சீமைக்கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த போது, வீ த லீடர்ஸ் என்ற அமைப்பை துவக்கினார். பொன்னிவாடி கிராமத்தில் உள்ள அந்த அமைப்பின் கிளை சார்பில் சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணி நடந்துவருகிறது.

    சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்து கடந்த 40 நாட்களுக்கு மேலாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மூலனூர் அருகே கோணேரிப்பட்டி கிராமத்தில் இருந்து, ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற பால்ராசு, தற்போது இமாச்சலபிரதேசம் சிம்லா மாவட்ட கலெக்டராக இருக்கிறார். விடுமுறையில் வந்த அவர் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    பால்ராசு கூறுகையில், அணைக்கட்டு மொத்தம் 937 ஏக்கரில் அமைந்துள்ளது.அவற்றில் 800 ஏக்கர் அளவுக்கு சீமைக்கருவேல மரம் வளர்ந்துள்ளது. அவற்றை முழுமையாக அகற்றி நீர்நிலையை பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகள் தான் அழியாத சொத்து.அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு பத்திரமாக ஒப்படைக்க வேண்டும். நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கம் 'நமது சொத்து' என்று பராமரிக்க வேண்டும் என்றார்.

    • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
    • பரவலான மழையால் முன்னெச்சரிகை நடவடிக்கை தீவிரம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள் ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 28 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

    ஆண்டியப்பனூர் அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    ஏலகிரிமலை, ஜவ்வாது மலைகளில் கனமழை பெய்து வருகிறது. எனவே, மாவட்டம் முழு வதும் உள்ள நீர்வரத்து கால்வாய் களை தூர்வார வேண்டும். நீர்நிலை களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ளபெரிய ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பியது. இதையடுத்து, ஏரி பகுதியை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்தார்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும், பருவமழை தீவிரமடைந்து வருவதால் நீர் நிலைகளை தொடர்ந்து கண் காணிக்க வேண்டும் என அதிகாரி களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து, திருப்பத் தூர் நகராட்சி ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை யும், திருப்பத்தூர் வனச்சரக அலு வலக வளாகத்தில் மாவட்ட மைய நூலக கட்டிடம் கட்டுவதற்கானஇடத்தை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதைதொடர்ந்து, ஜோலார் பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி, அசோக் நகர் அரசுப்பள்ளியில் அமைக்கப்பட் டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை கலெக்டர் ஆய்வு செய்தார். பிறகு, மாணவர்களுக்கு வழங்க தயாரிக்கப்பட்டிருந்த மதிய உணவை கலெக்டர் பரிசோதனை செய்தார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் வளர் மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, திருப்பத் தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகேசன், தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளபாளையம் குளக்கரையில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது .
    • சாரண-சாரணிய மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மங்கலம்:

    சாமளாபுரம் பேரூராட்சியில் நகரங்களுக்கான தூய்மையான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருப்போம் என்பதை வலியுறுத்தி சைக்கிள் பேரணி ,விழிப்புணர்வு ஊர்வலம், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. சைக்கிள் பேரணியை சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணியானது சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் துவங்கி பரமசிவம்பாளையம் வரை சென்று பின்னர் மீண்டும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நிறைவடைந்தது.

    இந்த சைக்கிள் பேரணிக்கு சாமளாபுரம் லிட்ரசி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். அதனைத்தொடர்ந்து "என் குப்பை எனது பொறுப்பு " என்ற தலைப்பில் நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது . இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவ,மாணவிகள் "நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருப்போம்" என்ற வாசகத்தை ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.இந்த விழிப்புணர்வு ஊர்வலமானது சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் துவங்கி பள்ளபாளையம் குளம் அருகே நிறைவடைந்தது.

    பின்னர் பள்ளபாளையம் குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பள்ளபாளையம் குளக்கரையில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது .இந்த சைக்கிள் பேரணி,விழிப்புணர்வு ஊர்வலத்தில் சாமளாபுரம் லிட்ரசி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள்,சாரண-சாரணிய மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற செயல்அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்களான வேலுச்சாமி, தயாளன் வினோஜ்குமார், பட்டீஸ்வரன், நித்யா ஆரோக்கியமேரி, மைதிலி, மேனகா, கிருஷ்ணவேணி, பூங்கொடி, மகாலட்சுமி, கனகசபாபதி, பிரியா, பெரியசாமி, துளசிமணி, மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி தொழிலாளர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி தொழிலாளர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், விஸ்வகுடி நீர்த்தேக்கத்தை முறையாக பராமரிக்க வேண்டும், நீர் வழித் தடங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நீர் நிலைகளை தூர்வாரி பராமரித்து நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த வேண்டும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் வளம் குறைந்து போனதால் குடிநீரில் உப்புத் தன்மை அதிகரித்து சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல் நலக்குறைபாடுகளால் அவதியுறும் பொதுமக்களை காப்பாற்றும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஏ.கே. விஸ்வநாதன், தேசிய மனித உரிமைகள் கழக கொள்கை பரப்புச் செயலாளர் கோசிபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×